தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும், ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தல அஜித் குமார், அடுத்ததாக நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்

தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் திரைக்கு வருகிறது. வலிமை திரைப்படத்தில் தல அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

வலிமை திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த வேதாளம் திரைப்படத்தின் ஆலுமா டோலுமா பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

தல அஜித் குமார் உடன் லட்சுமிமேனன் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த வேதாளம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார். அனிருத் இசையில் வேதாளம் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே 150 மில்லியன் பார்வையாளர்களையும் அடிச்சு துக்கு 100 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்தது குறிப்பிடத்தக்கது.