அமெரிக்காவில் படித்து வரும் சென்னையைச் சேர்ந்த இளம் பெண்ணின் ஆபாசப் படங்களை அந்த பெண்ணின் தாயாரிடம் காட்டி குடும்ப நண்பர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரியின் 26 வயது மகள் ஒருவர், அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்தார். 

தற்போது, மர்ம நபர் ஒருவர் அந்த அதிகாரியின் வாட்ஸ்ஆப்பில் எண்ணிற்கு அவரது 26 வயது மகளின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அத்துடன், அந்த ஆட்ஸ்ஆப்பில் ஆபாச படங்களை அனுப்பிய அந்த நபர், இதனை “சமூக வலைளத்தங்களில் வெளியிடாமல் இருக்க எனக்கு உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.87 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லை என்றால், உங்கள் மகளின் இந்த ஆபாசப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டு அதைவிட அதிகமாக சம்பாதித்து விடுவேன்” என்றும், மிரட்டியிருக்கிறார்.

மகளின் இந்த ஆபாசப் படங்களை பார்தது கடும் அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, உடனே சற்றும் யோசிக்காமல் இந்த மிரட்டல் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், அந்த நபர் போரூர் லட்சுமி நகர் 2 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 51 வயதான ரமேஷ் என்பவர் தான், இந்த ஆபாசப் படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “51 வயதான ரமேஷ் அமெரிக்காவில் மென்பொறியாளாராக வேலை பார்த்து வருகிறார்” என்பது தெரிய வந்தது.

மேலும், “கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தோடு ரமேஷ் அமெரிக்காவில் வசித்து வருந்த நிலையில், ரமேஷின் குடும்பமும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும்” இதில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறிப்பாக, “ரமேஷின் மனைவியும் இளம் பெண்ணின் தாயாரும் கல்லூரி நண்பர்கள் என்பதும், அதன் மூலமாக குடும்ப நண்பர்களாக அவர்கள் மாறினார்கள்” என்றும், தெரிய வந்தது.

இப்படியாக “கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு அதிகாரியின் மகளான அந்த இளம் பெண் மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற நிலையில், அங்கு குடும்ப நண்பர்களான ரமேஷின் வீடு உள்ள பகுதியான சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இந்த இளம் பெண் தங்கியிருந்தார். 

அப்போது, இந்த இளம் பெண்ணுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மனநல காப்பகத்தில் 12 நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்று வந்து போது, இளம் பெண்ணின் குடும்ப நண்பர்களான ரமேஷ் மற்றும் ரமேஷின் குடும்ப உறுப்பினர்கள் இந்த இளம் பெண்ணை கவனித்து வந்திருக்கிறார்.

அந்த சமயங்களில் தான், இந்த இளம் பெண் சாப்பிடுவது, குளிப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அவருக்கு உதவி தேவைப்பட்ட போது, இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ரமேஷ், தனது குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டதும்” போலீசாரின் விசாரணையில் முழுமையாக தெரிய வந்தது.

அதன் தொடர்்சிசாயக, “சிகிச்சை முடித்து இளம் பெண்ணை சென்னை அழைத்து வந்த அவரது தாயிடம் ஒப்படைத்த நிலையில், தற்போது நலமுடன் இருக்கும் இளம் பெண்ணுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இதனை, தனக்கு சாதகமாக்க முடிவு செய்த குடும்ப நண்பர் ரமேஷ், “கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்ணை ஆபாச எடுத்த படத்தை தற்போது அவருக்கு தாயாருக்கு அனுப்பி 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் கேட்டு மிரட்டி உள்ளதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்ட ரமேஷை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.