தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. முன்னதாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு.

போனி கபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் உடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக்பாஸ் பாவ்னி, அமீர் மற்றும் மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளாப்பதிவு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக அனிருத் பாடிய சில்லா சில்லா விரைவில் வெளியாக உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு படம் பொங்கல் வெளியீடாக வரும் 2023 ஜனவரியில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களுக்கு ஸ்வீட்டான அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், “உங்களை சிறப்பாக வைத்துக் கொள்ளும் & சிறந்ததை செய்ய ஊக்குவிக்கும் மனிதர்கள் உங்களை சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். போலியான அல்லது நெகட்டிவிட்டி வேண்டாம். உயர்ந்த இலக்குகள் & அதிகமான ஊக்குவிப்பு. நல்ல நேரங்கள் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி. பொறாமை & வெறுப்பு வேண்டாம். உங்களுடைய சிறந்ததை முழுமையாக வெளியில் கொண்டு வாருங்கள்.” என தெரிவித்து எப்போதும் போல், “வாழு & வாழ விடு அளவற்ற அன்புடன் அஜித்” என குறிப்பிட்டு அஜித்குமார் இந்த மெசேஜை திரு.சுரேஷ் சந்திரா அவர்களின் மூலம் தெரிவித்துள்ளார். திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் பகிர்ந்த நடிகர் அஜித்குமாரின் அந்த மெசேஜின் புகைப்படம் இதோ…
 

pic.twitter.com/gt9iOY20z7

— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022