தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜப்பான் படத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டில்(2022) கார்த்தி நடிப்பில் விருவன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் கடைசியாக அட்டகாசமான இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸானது.

இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ள சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சர்தார் திரைப்படத்திலிருந்து சொரக்கா பூவே வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த சொரக்கா பூவே வீடியோ பாடல் இதோ...