தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீசானது. முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சமந்தாவின் யசோதா பட ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் இயக்குனர் யானிக் பென்னுடன் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் ஆகியோர் இருக்கும் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியீட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

We are elated to have @YannickBen2 onboard!💐 #Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @Mee_Sunil @DirectorMysskin @iYogiBabu @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/09NhcWHC9H

— Shanthi Talkies (@ShanthiTalkies) November 16, 2022