சூப்பர் ஆக்சன் படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் அடுத்த அடுத்த வெளிவரும் திரைப்படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முதல்முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் அடுத்த AK62 படத்தில் அஜித் குமார் இணையவுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அஜித்குமார் நடிப்பில் அடுத்த ஆக்சன் பிளாக் திரைப்படமாக வருகிறது துணிவு. அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக போனிகபூர் தயாரிப்பில், இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. 

முன்னதாக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று டிசம்பர் 31ஆம் தேதி வெளியானது. பக்கா மாஸ் என்டர்டெய்னராக வந்த துணிவு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது யூட்யூப்பில் 24 மணி நேரத்தில் துணிவு படத்தின் ட்ரெய்லர் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிரடியான அந்த ட்ரெய்லர் இதோ…