தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அடுத்தடுத்து வரிசையாக தனக்கே உரித்தான ஸ்டைலில் அசத்தலான பக்கா என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தற்போது நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இயக்கத்தில் தயாராகி வருகிறது கஸ்டடி. 

அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். SR.கதிர் ஒளிப்பதிவில், கஸ்டடி படத்திற்கு வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கஸ்டடி திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். அடுத்த ஆண்டு (2023) கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

கஸ்டடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அதிரடி ஆக்சன் நிறைந்த கஸ்டடி திரைப்படத்தின் GLIMPSE வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் கொடுத்துள்ள அட்டகாசமான அந்த வீடியோ இதோ…