தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் அட்டகாசமான திரைப்படங்களை தயாரித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரலில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து வரிசையாக வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பாக தயாராகி இருக்கிறது பட்டத்து அரசன். களவாணி & வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பட்டத்து அரசன் திரைப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லோகநாதன்.S ஒளிப்பதிவில், ராஜா முஹம்மது படத்தொகுப்பு செய்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பட்டத்து அரசன் திரைப்படத்திற்கு சென்சாரில் “U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் எனவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Let’s make some noise for the #PattathuArasan 👑 coming to screens 📽️ near “U” on 25th NOV! ✨@Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa@SarkunamDir 🎬 @GhibranOfficial 🎶 #Loganathan 🎥 @editor_raja ✂️@gkmtamilkumaran 🤝 @LycaProductions #Subaskaran 🪙 pic.twitter.com/uKIc6J33L2

— Lyca Productions (@LycaProductions) November 14, 2022