தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக, சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக, ரசிகர்கள் தல என கொண்டாடும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வலிமை திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்தை போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த நாங்க வேற மாதிரி பாடல் மற்றும் வலிமை Glimpse வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்று வறுமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இன்று (டிசம்பர் 1)மாலை 7 மணிக்கு 2-வது பாடலின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார்  பொது மக்கள், ஊடகங்கள் மற்றும் தனது உண்மையான ரசிகர்களிடம் முக்கியமான வேண்டுகோளாக அன்பு கட்டளையிட்டுள்ளார், அதில்

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார் , மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். 
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அஜித்குமார் .

என தெரிவித்துள்ளார் அஜித்குமாரின் இந்த அன்புக்கட்டளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவு இதோ…