எக்கச்சக்கமான சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகராக விளங்கும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக வெளிவந்த வலிமை ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. அதே சமயத்தில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படத்தோடு ரிலீஸாக இருப்பதால் இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் துணிவு திரைப்படத்தின் முதல் பாடல், டீசர், ட்ரைலர் ஆகியவை வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே துணிவு திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் அஜித்குமார் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக, "ஒரு நல்ல படம் என்பதே ப்ரொமோஷன் தானே!" என அஜித் குமார் அவர்கள் பதிலளித்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ… 
 

"A good film is promotion by itself!! - unconditional love!
Ajith

— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022