ஸ்காட்லாந்து பயணத்தில் கூலாக கார் ஓட்டும் அஜித்குமார்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ - புகைப்படங்கள் இதோ!

ஸ்காட்லாண்டில் கார் ஓட்டும் அஜித் குமாரின் வீடியோ வெளியானது,ajith kumar car driving video from scotland trip | Galatta

தென்னிந்திய சினிமாவில் பலகோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராகவும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் திகழும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. தனது முதல் இரண்டு திரைப்படங்களால் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் H.வினோத் முதல்முறையாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்தார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் ரீமேக்காக வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் மீண்டும் இணைந்தது இந்த வெற்றி கூட்டணி.

ரசிகர்கள் விரும்பும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படமும் வெற்றியைப் பெற ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவது முறையாக தொடர்ந்து இணைந்த அஜித் குமார் - H.வினோத் கூட்டணியில் அடுத்து தயாரான திரைப்படம் தான் துணிவு. அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார்.

போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசான துணிவு திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் AK62 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கும் அஜித்குமார் அவர்கள் தற்போது ஸ்காட்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்காட்லாண்டில் காரில் பயணம் செய்து வரும் அஜித் குமார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போடும் புகைப்படமும் கார் ஓட்டும் வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் வருகிறது. ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…
 

இது நம்ம AK RIDE 😍#AjithKumar #AK62 #Thunivu #Ajith #Scotland #Travel #TravelDiaries #Galatta pic.twitter.com/yGNW4NnpYs

— Galatta Media (@galattadotcom) February 16, 2023
 

The latest pictures of Ajith are certainly a feast for the eyes ✨#Ak #Ajith #AjithKumar #London #Travel #AK62 pic.twitter.com/DI28YK6j93

— Galatta Media (@galattadotcom) February 16, 2023

சினிமா

"நீ சிறந்தவன்... நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!"- காதலர் தினத்தில் தனது காதலர் குறித்து மனம்திறந்த ஸ்ருதி ஹாசன்! விவரம் உள்ளே

செலிப்ரேஷனுக்கு ரெடியா..? சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட அசத்தலான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!
சினிமா

செலிப்ரேஷனுக்கு ரெடியா..? சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட அசத்தலான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!
சினிமா

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!