‘நானே வருவேன்’ படத்தில் நான் ஏன் நடிக்க வந்தேன்னா?.. உண்மையை உடைத்த செல்வராகவன்.. - வைரலாகும் வீடியோ இதோ..

தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பில் நடந்தது குறித்து செல்வராகவன் -  Selvaraghavan explains what happened in naane varuven set | Galatta

வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘பகாசூரன்’ திரைப்படத்தை குறித்து அப்படத்தின் கதாநாயகன் இயக்குனர் செல்வராகவன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதனுடன் அவரது திரைப்பயணம் குறித்தும் அவர் நடிக்க வந்த அனுபவம் குறித்து நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்தார்.  இதில், நானே வருவேன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தது குறித்தும் அதன் பின்புலம் குறித்தும் விளக்கினார்.

அதில் அவர், "நான்தான் அந்த கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்று செய்யவில்லை. கடைசி நேரத்தில் அந்த கதாபாத்திரம் நடிக்க வேண்டிய நடிகர் வரவில்லை. எல்லாம் தயாராக இருக்க ஒரு நடிகர் தேவைப்பட்டது. அப்போது தான் படப்பிடிப்பு தொடங்கும் என்ற நிலையில் வந்து நின்றோம். எல்லோரும் நான் நடிக்க வேண்டும் என்று இழுத்துவிட்டார்கள். என்னோட உதவி இயக்குனர்கள் எல்லாரும் வற்புறுத்தினார்கள். அதனால் தான் அதில் நடிக்க வேண்டியதா ஆனது" என்றார் செல்வராகவன்.

மேலும் தொடர்ந்து "நடித்து கொண்டே படம் இயக்குவது மிகுந்த வலி நிறைந்தது. தனுஷ் அதை செய்யும் போதே பார்த்திருக்கிறேன். குடு குடு னு ஓடி நடித்துவிட்டு திரும்பவும் ஓடி வந்து காட்சியை பார்ப்பது னு.. அது ரொம்ப வலி நிறைந்தது. வலியை விட அதிக ஈடுபாடு தேவை என்றே சொல்லலாம்.  மேலும் அதற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. சில பேருக்கு இயற்கையாகவே அது வரும். உதாரணமாக நடிகரும் இயக்குனருமான கிளிண்ட் ஈஸ்ட்வுட் அதை அசால்டாக செய்வார்" என்றார்.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமானவர். 90களில் அவர் இயக்கிய திரைப்படங்கள் காலம் கடந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் எல்லாம் தனுஷ் திரையுலகில் மிக முக்கியமான மைல்கல்லாக உள்ளது. மேலும் செல்வராகவனின் பல திரைப்படங்களுக்கே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராக புகழுடன் வலம் வரும் செல்வராகவன் சமீபத்தில் படங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான, பீஸ்ட். சாணி காகிதம்,  நானே வருவேன் திரைப்படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதன் படி செல்வராகவன் தற்போது  நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பகாசூரன் தனி எதிர்பார்ப்பை உருவக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செல்வராகவன் அவரது திரைப்பயணம் மற்றும் நடிப்பு அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..

யோகி பாபுவிற்கு தல தோனி கொடுத்த Surprise.. - நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரல்..
சினிமா

யோகி பாபுவிற்கு தல தோனி கொடுத்த Surprise.. - நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரல்..

Vibe க்கு ரெடியா? வெளியானது ‘மாவீரன்’ படத்தின் முதல் பாடலின் Glimpse.. -  உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..
சினிமா

Vibe க்கு ரெடியா? வெளியானது ‘மாவீரன்’ படத்தின் முதல் பாடலின் Glimpse.. - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..

காதலரை அறிமுகம் செய்த பிக் பாஸ் ஆயிஷா .. இவர்தான் அந்த பிரபலம்.. -  இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

காதலரை அறிமுகம் செய்த பிக் பாஸ் ஆயிஷா .. இவர்தான் அந்த பிரபலம்.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..