காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பொய் பொய் பொய் மியூசிக் வீடியோ,hip hop tamizha adhi in poi poi poi music video on valentines day | Galatta

சுயாதீன இசைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி "கிளப்ல மப்புல" பாடல் மூலம் பிரபலமடைந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது "வாடி புள்ள வாடி" பாடல் மூலம் இன்னும் பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் இடம்பெற்ற "தப்பெல்லாம் தப்பே இல்லை", சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் வெளிவந்த "எதிர்நீச்சல் அடி", வணக்கம் சென்னை படத்தின் "சென்னை சிட்டி கேங்ஸ்டா", தளபதி விஜயின் கத்தி படத்தின் "பக்கம் வந்து" ஆகிய பாடல்களைப் பாடி கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கினார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

தொடர்ந்து இன்று நேற்று நாளை மற்றும் தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து தனி கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, தொடர்ந்து அரண்மனை 2, கதக்களி, கவண், இமைக்கா நொடிகள், வந்தா ராஜாவா தான் வருவேன், Mr.லோக்கல், கோமாளி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி மீசையை முறுக்கு திரைப்படத்தை இயக்கி நடித்தார். தொடர்ந்து இவர் இயக்கி நடித்த நட்பே துணை திரைப்படமும் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து நான் சிரித்தால் மற்றும் சிவக்குமாரின் சபதம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

கடைசியாக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனிடையே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் வீரன். மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இயக்குனர் சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதிக கதாநாயகனாக நடித்த வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் இதர அறிவிப்புகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் PT Sir திரைப்படத்தில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் PT Sir திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்த வருகிறார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி உலகமே காதலர் தினம் கொண்டாடும் சமயத்தில் காதலர் தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது புதிய மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொய் பொய் பொய் என காதலின் தோல்வியாலும் விரக்தியாலும் வாடும் காதலனின் புலம்பலாக தனக்கே உரித்தான பாணியில் தனது ராப்போடு எழுதி, பாடி, இசையமைத்திருக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இயக்குனர் ரோஷன் ராகவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த மியூசிக் வீடியோவிற்கு அருண் ராஜா ஒளிப்பதிவில், உதயராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து கிருத்திகா பாபு இந்த மியூசிக் வீடியோவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தன்று காதலின் ஏமாற்றத்தை வலியோடு சொல்லும் பாடலாக இந்தப் பொய் பொய் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அந்த மியூசிக் வீடியோ இதோ…
 

பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா... உடல்நிலை பூரண குணமடைய வேண்டி படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு! வீடியோ இதோ
சினிமா

பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா... உடல்நிலை பூரண குணமடைய வேண்டி படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு! வீடியோ இதோ

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே
சினிமா

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே