ரசிகர்கள் எதிர்பார்த்த தளபதி விஜயின் வாரிசு பட அடுத்த சர்ப்ரைஸ்... OTT ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் வாரிசு பட OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு,thalapathy vijay in varisu movie ott release date announcement | Galatta

தனது திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் 67-வது திரைப்படமான லியோ திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தின் சமயத்தில் இருந்து தளபதி 67 திரைப்படத்திற்கான பேச்சுக்கள் தொடங்கிய நிலையில் வாரிசு திரைப்படத்தின் சமயத்தில் இன்னும் அதிகரித்தது. வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் தொடர்ச்சியாக தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் கேட்கப்பட்ட நிலையில், அவர் தெரிவித்தபடி, வாரிசு ரிலீஸுக்கு பிறகு வரிசையாக தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் வெளிவந்தன. அந்த வகையில் மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் அதிரடியான பிளடி ஸ்வீட் அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

இதனிடையே முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. முதல்முறையாக தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார். 

தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முன்னதாக வாரிசு திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பாக வாரிசு திரைப்படம் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் SUN NXT தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இந்தியாவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவில் வாரிசு திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The Boss returns 🔥#Varisu streaming from 22nd February on #SunNXT (Not available in India) #Varisu #VarisuOnSunNXT #ThalapathyVijay #RashmikaMandana pic.twitter.com/VYj9STO8JO

— SUN NXT (@sunnxt) February 16, 2023

செலிப்ரேஷனுக்கு ரெடியா..? சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட அசத்தலான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!
சினிமா

செலிப்ரேஷனுக்கு ரெடியா..? சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட அசத்தலான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!
சினிமா

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பில் காதலர் தின கொண்டாட்டம்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பில் காதலர் தின கொண்டாட்டம்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் GLIMPSE இதோ!