செலிப்ரேஷனுக்கு ரெடியா..? சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட அசத்தலான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட புதிய அறிவிப்பு,sivakarthikeyan in maaveeran movie special announcement | Galatta

சின்னத்திரையின் வாயிலாக தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கதாநாயகனாக முத்திரை பதித்து ரசிகர்கள் இதயங்களை கொள்ளையடித்து வருகிறார். பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா படத்தில் மூலம் கதாநாயகனாக களமிறங்கி மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உயரத் தொடகினார்.

அடுத்தடுத்து மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினிமுருகன், ரெமோ என வரிசையாக ஹிட் திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த வேலைக்காரன், சீம ராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான மிகப்பெரிய வெற்றியை பெற தவறின. இருப்பினும் தானொரு பக்கா எண்டர்டெய்னர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்ப்பை வெற்றியை பெறவில்லை. ஆனாலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்த்த ஏற்படுத்திருக்கின்றன. அதில் முதலாவதாக, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK24 திரைப்படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாவீரன் திரைப்படத்தின் ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டு புதிய போஸ்டரோடு பட குழுவினர் கொடுத்துள்ள இந்த அறிவிப்பு முதல் பாடலுக்கான அறிவிப்பாக இருக்கும் என தெரிகிறது. இது குறித்த அடுத்த அறிவிப்பு வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Get ready folks..!🥁 #Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @DirectorMysskin @iamarunviswa @iYogiBabu @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @LokeshJey @sivadigitalart @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/xMvyKTMaFJ

— Shanthi Talkies (@ShanthiTalkies) February 14, 2023

சினிமா

"காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம்!"- காதலர் தினம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் அறிக்கை இதோ!

பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா... உடல்நிலை பூரண குணமடைய வேண்டி படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு! வீடியோ இதோ
சினிமா

பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா... உடல்நிலை பூரண குணமடைய வேண்டி படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு! வீடியோ இதோ

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படம் கோல்ட் மாஃபியாவா..? சுவாரசியமான பதிலளித்த பிரபல இயக்குனர்! வீடியோ இதோ