சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் இயக்குனராக வலம் வருகிறார். கடைசியாக சினிமா வீரன் எனும் டாக்குமென்ட்ரி படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 மற்றும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அடுத்ததாக காதலர்கள் தினத்தன்று ரிலீஸ் செய்யும் வகையில் புதிய மியூஸிக் வீடியோ ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முன்னதாக சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது விவாகரத்தை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியும் எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். தயவுசெய்து முகக் கவசங்கள் அணிந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்

என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.