இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான  வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

குறிப்பாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களாக கவனிக்கப்பட்டன. ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கியுள்ள மோகன்தாஸ் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR திரைப்படம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நடிகர் விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் FIR திரைப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.

FIR திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் & இயக்குனர் கௌரவ் நாராயணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள FIR படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் விஷ்ணு விஷாலின் FIR  திரைப்படத்தில் இருந்து Anthem of Harmony பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.