தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள கணம் திரைப்படத்தில் நடிகர் சர்வானந்த் உடன் இணைந்து நடிகர் சதீஷ் நடித்துள்ளார். சமீபத்தில்  வெளிவந்த கணம் படத்தின் டீசர் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

இதுவரை நகைச்சுவை நடிகராக கலக்கிய நடிகர் சதீஷ் தற்போது  கதாநாயகனாக களமிறங்கி கலக்கியுள்ள திரைப்படம் நாய் சேகர். பிரபல  நடிகர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள நாய் சேகர் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி ஆம் தேதி ரிலீசான நாய் சேகர் படத்தில் நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா கதாநாயகியாக நடிக்க நடிகர்கள் மனோபாலா & லிவிங்ஸ்டன் ஆகியோருடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ள நாய் சேகர் படத்திற்கு அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்த நாய் சேகர் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக  ராக்ஸ்டார் அனிருத் இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய எடக்கு மொடக்கு எனும் நாய் சேகர் படத்தின் பாடலும் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இப்பாடலின் வீடியோ வெளியானது. கலக்கலான அந்த வீடியோ பாடல் இதோ…