கடந்த 2008-ம் ஆண்டு நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து நீர் பறவை, வம்சம், சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்ட உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படத்தில் சுனைனாவின் நடிப்பு பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. 

லாக்டவுன்னுக்கு பின்னர் ட்ரிப் என்ற திரைப்படத்தில் யோகிபாபுவுடன் நடித்த அவர், இப்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் சுனைனாவுக்கு திருமணம் என்று வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், தனது திருமணம் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு, தனது திரைப்படங்கள் குறித்து பேச வேண்டும். இப்போதைக்கு தான் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

நடிகைகள் என்றால் வதந்திகள் வர தானே செய்யும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் அவர்களும் நம்மை போல் மனிதர்கள் தானே என்று சுனைனாவுக்கு ஆறுதல் கரம் நீட்டி வருகின்றனர் ரசிகர்கள்.