மாடல் ஆக அறிமுகமாகி பல விளம்பர படங்களில் நடித்து அசத்தியவர் சுபா பூஞ்சா.இதனை தொடர்ந்து தமிழில் மச்சி என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் சுபா பூஞ்சா.இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் சுபா பூஞ்சா.

அடுத்ததாக கன்னடத்தில் நடிக்க தொடங்கிய சுபா பூஞ்சாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.இதனை அடுத்து கன்னடத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் சுபா பூஞ்சா.இவரது நடிப்பிற்காக இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

படங்களை தவிர கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சுபா பூஞ்சா.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் சுபா பூஞ்சா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவர் சுமந்த் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொள்வதாக இருந்தார் ஆனால் பிக்பாஸ் தொடரால் இவர்களது திருமணம் தள்ளிப்போனது.இவர்களது திருமணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.