அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். 

படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த ஆண்டு நிவர் புயலின் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் கொட்டும் மழையில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சாக்ஷி. சாக்ஷி பதிவிடும் ஃபிட்னஸ் டிப்ஸால் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலம் கூடியது. 

ஆர்யா நடித்த டெடி, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் சாக்ஷி. இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். நந்தா இயக்கிய 120 hours திரைப்படமாகும். 

சமீபத்தில் நான் கடவுள் இல்லை படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சாக்ஷி. இயக்குனர் SA சந்திர சேகர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி, காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொருத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது தான். இந்தாண்டு நான் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அவர் கூறினார். சாக்ஷியின் இந்த செயலை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.