நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தனிப் பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றார். 

இந்த வெற்றிக்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி நேரில் சென்று சந்தித்து  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது மகன் திரு.உதயநிதி ஸ்டாலினுக்கும் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி - 

"புரட்சி படைத்த முதல்வருக்கும் துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துக்கள்" 

என அவரது வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு சிறு வேடங்களில்  கூட்டத்தில் ஒருவராகவும் ஒரு காட்சிக்கு வரும் நடிகராகவும்  10 வந்த நடிகர் சூரி  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார் தமிழகத்தின் முன்னணி நடிகர்களாக இருக்கும்  தளபதி விஜய் தல அஜித் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என அனைவருடனும் இணைந்து நடித்த நடிகர் சூரி .

actor soori meets m k stalin and udhaynithi and congratulates both

தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் . தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன்  ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் திரு. எல்ரெட் குமார் தயாரிப்பில்  விடுதலை  திரைப்படத்தை இயக்குகிறார். விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் சூரியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்  இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். இதில் இத்திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் வெற்றிமாறன் முதன் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.