அது இது எது,கலக்கப்போவது யாரு போன்ற விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தனது காமெடி மூலம் தற்போது விஜய் டிவியின் முன்னணி காமெடியனாக மற்றும் அல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் புகழ்.

முதலில் பெண் வேடமிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் புகழ்.அடுத்ததாக விஜய் டிவியின் புதிய முயற்சியாக தொடங்கிய குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்றார் புகழ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார் புகழ்.

அடுத்ததாக சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இவர் காமெடியில் கலக்க பட்டி தொட்டி எங்கும் உள்ள ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து , பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார் புகழ்.தனது கடின உழைப்பால் உயர்ந்த இந்த நகைச்சுவை கலைஞரை ரசிகர்கள் தற்போது பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழின் மூலம் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் புகழ் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் யூடியூப்பில் 1 மில்லியன் ரசிகர்களை கடந்துள்ளார் இதனை இவருடன் குக் வித் கோமாளியின் இணைந்து பங்கேற்ற பவித்ரா,பாலா உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.