2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இந்த நிலையில், 5 மாநிலத்திலும் தற்போது வாக்கு எண்ணும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில், ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 

அதன் படி, 

தமிழகத் தேர்தல் முடிவுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 அமைச்சர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலையில் இருக்கிறார். அதே போல், ஓ. பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ, சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வருகின்றனர்.

ஆனால், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னடைவை சந்தித்து உள்ளார்.

அவரைப் போலவே, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து உள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது பின்தங்கி உள்ளார். 

நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் பின்னடை சந்தித்து வருகிறார்.

வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவை சந்தித்து வருகிறார். 

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். 

ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், தற்போது பின்னடைவில் இருக்கிறார்.

மேலும், அமைச்சர்களான சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும் தற்போது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.