சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், அதிமுக சென்னையை மொத்தமாக இழக்கிறதா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் தற்போது வாக்கு எண்ணும் பணி முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணும் பணி, தற்போது வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது மதியம் 2 மணி நிலவரப்படி, திமுக 148 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதில், அதிமுக கூட்டணி 90 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. 

மிக முக்கியமாக, தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்கள்.

இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி, தற்போதய மத்திய 2 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகள் 148 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 இடங்களிலும் வரிசையாக முன்னிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், மொத்தமாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக கூட்டணி தான் முன்னிலையில் இருக்கிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம், ஆர். கே நகர், அண்ணா நகர், எக்மோர், துறைமுகம், கொளத்தூர், மைலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காலை முதலே தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் மு.க ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை விட 11203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், காலை முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

ஆனால், அதிமுக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சர் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து உள்ளனர்.

அதே போல், திமுக வேட்பாளர் லட்சுமணன், அதிமுக வேட்பாளர் சி.வி சண்முகத்தை விட 754 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

திமுக வேட்பாளர் எ.வ வேலு, பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலுவை விட 17.178 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

சென்னை அண்ணாநகர் தொகுதியில், திமுவின் எம்.கே மோகன், அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை விட 4643 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிணியில் இருக்கிறார்.

துறைமுகம் தொகுதியில், திமுகவின் சேகர் பாபு பாஜகவின் வினோத் பி செல்வத்தைவிட, 1883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், கடந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை ஒரு தொகுதியில் கூட அதிமுக முன்னிலையில் இல்லாத நிலையில், சென்னை கோட்டையில் திமுக கொடி பறக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.