இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமை, உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் தமிழரின் பெருமை  இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம் வாயிலாக தென்றலாக வீசத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான், இசை புயலாக மையம் கொண்டு இன்னும் வழுவிழக்காமல் இசை மழையை  கொட்டிக் கொண்டே இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் வருகைக்கு பின்பு ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் திரை இசையும் புது சத்தம் பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய விஷயங்களை ஒரு பாடலுக்குள் புகுத்த வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொரு பாடலையும் மிகவும் சிரத்தையோடு மெனக்கெட்டு இசை அமைத்து இசை ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

  master poovaiyar joins with ar rahman for one more time

விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாயாளராக கலந்து கொண்ட சிறுவன் பூவையார் .அந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று வரை தகுதி பெற்ற  பூவையார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின்  வெறித்தனம்  பாடலில் பாடி பாடல் காட்சியில் தளபதி விஜய்யுடன் பாடலுக்கு நடனமும் ஆடினார் . 

தெற்காசிய நாடுகளில் இருக்கும்  சுயாதீன இசை கலைஞர்களுக்காக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் துவக்கிய அமைப்பு மாஜா. இந்த மாஜா தளத்தின் மூலமாக  மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இருந்த சுயாதீன இசைக்கலைஞர்களை  போல தெற்காசிய நாடுகளில் இருக்கும் இசைக்கலைஞர்களின் குரலை உலக அரங்கில் கொண்டு செல்கிறார் ஏ.ஆர்.ரகுமான் . சமீபத்தில் இந்த மாஜா தளத்தில் முதல் முறையாக என்ஜாய் என்ஜாமி என்ற பாடல் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான “சந்தோஷ் நாராயணன்” இசையில் பிரபல இளம் பாடகி “தீ” குரலில் “தெருக்குரல்-அறிவு” எழுதி பாடிய பாடல் என்ஜாய் என்ஜாமி. இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் இந்த தளத்தில் இன்னொரு தமிழ் பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது.மூப்பில்லா தமிழே தாயே எனும் அந்தப் பாடலின்  முன்னோட்டத்தை சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட நிலையில் அந்த பாடலின் மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதில் மாஸ்டர் பூவையார் மற்றும்  அயரா மற்றும் கேடி என்கிற கருப்பு துரை திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை கேப்ரியலா ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த புகைப்படங்களை ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராமில் இன்று அவருடைய  வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)