தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த DON திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல் முறை சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா ரிபோஷப்கா கதாநாயகியாக நடிக்கும் ப்ரின்ஸ் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள,ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். தமன்.S இசையமைத்துள்ளார்.

சாந்தி பிலிம்ஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து வழங்க, கோபுரம் சினிமாஸ் வெளியிடும் ப்ரின்ஸ் திரைப்படம்  தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலர் இதோ…