என்றென்றும் மலையாள சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் விளங்கும் நடிகர் மோகன்லால் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டு (2022) ப்ரோ டாடி, ஆராட்டு மற்றும் 12th மேன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக இயக்குனர் ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ALONE திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில், முதல்முறை இயக்குனராக களமிறங்கிய மோகன்லால் இயக்கி நடித்துள்ள பரோஸ்-காடியன் ஆஃப் டி' காமா'ஸ் ட்ரஷர் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - திரிஷா இணைந்து நடித்துள்ள ராம் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக ப்ரீத்தி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராகும் L2-EMPURAAN படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த வரிசையில் இயக்குனர் வியாசக் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகியுள்ளது. மோகன்லாலுடன் சித்திக், மஞ்சு லக்ஷ்மி, ஹனிரோஸ், கணேஷ்குமார், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படத்திற்கு தீபக் இசையமைத்துள்ளார்.

ஆசிர்வாத் சினிமா சார்பில் அண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள மான்ஸ்டர் திரைப்படத்திற்கு சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்ய, ஷமீன் முஹம்மது படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் மான்ஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…