சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது. முன்னதாக இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று நிறைவடைந்தது.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை செலிபிரிட்டி அல்லாத பொது மக்களில் இருந்து ஒரு போட்டியாளர் கலந்து கொள்ள இருப்பதும் இம்முறையும் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் செலிபிரிட்டி குறித்து சமூக வலைதளங்களில் பலரது பெயர்கள் வதந்திகளாக பரவி வந்த நிலையில், தற்போது சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகரான மணிகண்டா ராஜேஷ் போட்டியாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான நடிகர் மணிகண்டா ராஜேஷ் பிரபலமான பல சீரியல்களில் நடித்ததோடு விஜய் டிவியின் Mr&Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டவர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனது சகோதரர் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியானதாகவும் மிகவும் எமோஷனலானதாகவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரருக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு மணிகண்டா ராஜேஷுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)