ஜெயிலர் படத்திற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..

ஜெயிலர் படத்திற்காக நன்றி தெரிவித்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் – Actor Shivaraj kumar thanks to fans for Jailer response | Galatta

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா, விடிவி கணேஷ், விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் கூடுதல் சுவரஸ்யமாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன் லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.  ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் கடந்த வியாழன் கிழமை வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இதுவரை வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவருடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்.

"சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி சார் நடிச்ச ஜெயிலர் படம் எல்லா இடத்துலையும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நல்ல வசூல் நிலவரமும் வருது.. நான் மோகன் லால், ஜாக்கி ஷராப் எல்லோரும் காமியோ பண்ணிருக்கோம். இந்த அன்பு ஆதரவு நீங்கள் கொடுத்ததற்கு நேரடியா நன்றி சொல்ல விரும்புகிறேன். அதே மாதிரி நெல்சன் சார், சன் பிக்சர்ஸ் க்கு நன்றிகள் குறிப்பாக ரஜினி சாருக்கு எனது நன்றி தெரிவித்திருக்கிறேன். அவர் கூட நடிக்கனும்னு நிறைய பேர் காத்திருக்காங்க.. அதுல நானும் ஒருத்தன். அந்த வாய்ப்பு எனக்கு இப்போ கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.. ரசிகரின் அன்பையும் ஆதரவையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன்” என்று பேசியுள்ளார்..  

இதையடுத்து நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவராஜ் குமார் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தென்னிந்தியாவில் கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக தமிழ் ரசிகர்களும் இவரது படங்களை கொண்டாடியதுண்டு. இந்நிலையில் முதல் முறையாக தமிழில் சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்தது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தை யடுத்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ என்ற தமிழ் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು. Thank you for the love on #Jailer & Narasimha. In Cinemas near you@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @sunpictures @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi pic.twitter.com/SJ1zxgRlJq

— DrShivaRajkumar (@NimmaShivanna) August 11, 2023