"ஸ்டண்ட் மேன் To ஸ்டண்ட் மாஸ்டர்!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஸ்டண் சிவாவின்  எமோஷனல் தருணங்கள்! வீடியோ இதோ

ரஜினிகாந்துடன் ஸ்டண்ட் மேன் to ஸ்டண்ட் மாஸ்டர் பற்றி பேசிய ஸ்டண் சிவா,stun siva shared emotional moments with rajinikanth in jailer movie | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 

நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பலம் எது என பார்த்து அவை ஒவ்வொன்றையும் காட்சிகளில் அழகாக வடித்து மிகவும் நேர்த்தியான மாஸ் என்டர்டெய்னிங் படமாக இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கி வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சிவா அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், "ஏதாவது ஒரு எமோஷனலான தருணத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா? ஒரு ஸ்டண்ட் மேனாக ரஜினி சார் உடன் நிறைய படங்களில் பணியாற்றி இருப்பீர்கள்.. ஸ்டன்ட் மேன் to ஸ்டன்ட் மாஸ்டர் ரஜினி சாருக்கு ஆக்சன் சொல்லி அவர் நடிப்பது அந்த ஒரு எமோஷனல் பயணம் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?" எனக் கேட்ட போது, 

"ஜெயிலரில் நிறைய செய்திருக்கிறோம்.. பார்த்திருப்பீர்கள் நிறைய ஆக்சன் காட்சிகள் அந்த முதல் ஃபைட்டில் தலையை வெட்டும்போது, அந்த கார் கதவை திறந்து கத்தியை எடுக்கக்கூடிய ஷாட்.. அவர் அந்த கத்தியை பிடித்து எடுக்கக் கூடிய ஒரு ஆங்கிள் வைக்கிறேன் அல்லவா? அது அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். அந்த கத்தியை பிடிப்பதாகட்டும், எடுப்பதும், எடுத்து அந்த 'லுக்' பார்ப்பதும், வெட்டுவதும் அந்த ரியாக்ஷன் அது ரொம்ப ரசித்து எடுத்தோம். அதேபோல் இடைவேளை காட்சியில் இந்த நாற்காலியில் உட்கார்ந்து கையெடுத்து பின்னால் வைத்துக் கொண்டு… ஸ்னைப்பரில் சுடும் போது ரத்தத்தை துடைத்துக் கொள்ள அந்த டிஷ்யூ பேப்பர் கொடுப்பது… அதன் பிறகு ஒருத்தரை அடித்து தூக்கி போட்டு சேரில் கால் வைத்து கழுத்தில் அழுத்துவாரே அதில் ஒரு லோ ஆங்கில் ஷாட் வைத்திருப்போம் சரியாக வந்து திரும்பி ஸ்மைல் பண்ணுவார். அதெல்லாம் மிகவும் ரசித்து எடுத்தோம். சூப்பர் ஸ்டார் உடன் அப்படி ஒவ்வொரு ஷாட்டும் எடுக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் ஸ்டண்ட் ஸ்டன் சிவா அவர்களின் அந்த முழு பேட்டையை கீழே உள்ள லிங்கம் காணலாம்.