ஜெயிலர் படம் தொடர்பாக தன்னை திட்டிய ரசிகருக்கு கூலாக பதில் கொடுத்த Chef வெங்கடேஷ் பட்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

திட்டிய ரசிகருக்கு கூலாக பதிலளித்த வெங்கடேஷ் பட் பதிவு உள்ளே - Chef Venkatesh bhat cool reply to fans trolls | Galatta

உலகமெங்கும் உள்ள கோடான கோடி ரசிகர்களை எதிர்பார்பின் மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷனில் மிரட்டியிருக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், விநாயகன், ஜாக்கி ஷரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு போன்ற நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பரவலாக நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க ஒரு புறம் ரசிகர்கள். ஒருபுறம் பிரபலங்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் படம் குறித்து ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக இணையத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல சமையல் கலை வல்லுனரும் பிரபல நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளி’ யின் நடுவருமான வெங்கடேஷ் பட் அவர்கள் ஜெயிலர் படம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “நாளை மதியம்  1 மணி ஜெயிலர் படம்.. எனக்கு விசில் அடிக்க தெரியாது..அதுக்காகவே 10 பேர் கூட வராங்க.. நாளைக்கு சம்பவம் டா..” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வெங்கடேஷ் பட் பதிவு இணையத்தில் வைரலானது.

அதில் ரசிகர் ஒருவர் வெங்கடேஷ் பட் அவர்களை திட்டி கமெண்ட் செய்திருந்தார். அந்த பதிவில் “ரொம்ப முக்கியமான தகவல்.. உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா த்தூ..”  என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதன்பின் வெங்கடேஷ் பட் அவரது கமெண்டிற்கு கூலாக பதிலளித்துள்ளார்.

அவர் பதிவில் யாரையும் புண்படுத்தும் படி “கண்டிப்பா இல்லையே..” என்று பதிலளித்துள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் பட் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே Chef வெங்கடேஷ் பட் தீவிர ரஜினி ரசிகர் . அதை பல இடங்களில் தெரிய படுத்தியுள்ளார். குறிப்பாக குக்கு வித் கோமாளி நிகச்சியில் என்பது குறிபிடத்தக்கது.