சசிகுமாரின் அதிரடி அவதாரம்... ‘போர் தொழில்’ வரிசையில் சரத்குமாரின் அடுத்த போலீஸ் படம்- கவனம் ஈர்க்கும் நா நா பட ட்ரெய்லர் இதோ!

சசிகுமார் சரத்குமாரின் நா நா பட ட்ரெய்லர் வெளியீடு,Sasikumar sarathkumar in naa naaa movie trailer out now | Galatta

நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் இயக்குனராகவும் திகழும் சசிகுமார் அவர்கள் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் நான்காம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. முன்னதாக இந்த 2023ம் ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நந்தன் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்த சசிகுமார் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் நா நா. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முன்னணி கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த போர் தொழில் திரைப்படத்தை காவல்துறை அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்த சரத்குமார் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நா நா படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நிறங்கள் மூன்று, தி ஸ்மைல் மேன், ஆழி மற்றும் பரம்பொருள் உள்ளிட திரைப்படங்கள் சரத்குமார் நடிப்பில் அடுத்த அடுத்த வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் நா நா திரைப்படம் விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர இருக்கிறது.

பூபதி ராஜா & NV.நிர்மல் குமார் கதையில், பூபதி ராஜா மற்றும் தயாநிதி சிவக்குமார் வசனம் எழுத, இயக்குனர் NV.நிர்மல் குமார் இயக்கியுள்ள நா நா திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சசிகுமார் உடன் இணைந்து பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பக்ஸ், பிரதீப் ராவத், கனிஷ்க், டெல்லி கணேஷ், ரமா, சஞ்சய், ஸ்வரூப், ஹரிப்ரியா, ஜெயந்தி மற்றும் பாண்டி கண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ஆகாஷ் ஔஸோம் படத்தொகுப்பு செய்திருக்கும் திரைப்படத்திற்கு ஹர்ஷ வர்த்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். 

சென்னையில் ஒரு நாள் - 2 மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் P.K.ராம் மோகன் அவர்கள் தனது கல்பத்தரு பிக்சர்ஸ் சார்பில் விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த நா நா திரைப்படத்தை  தயாரித்திருக்கிறார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நா நா திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நா நா திரைப்படத்தின் ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.