“6 நாட்களில் மிகப்பெரிய வசூலை குவிக்கும்" ஜெயிலர் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த கொண்ட தகவல் – விவரம் இதோ..

ரஜினிகாந்தின் ஜெயிலர் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த  தகவல் - Producer Dhananjayan about rajinikanth jailer collection report | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஆக்ஷனில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டங்களுடன் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் இப்படம் குறித்து பரவலாக தங்களது நேர்மறையான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது கலட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் ஜெயிலர் திரைப்படம் குறித்தும் அதன் வசூல் நிலவரம் மற்றும் கணிப்பு குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது. ரசிகர்களை பொறுத்தவரை கொண்டாடிட்டு இருக்காங்க.. இது 3 மணி நேரம் படம். கொஞ்சம் நேரம் கம்மியா இருந்தா 10 ஷோக்கள் பதில் 12 ஷோ போட்டிருப்போம். எல்லா ஷோவும் ஹவுஸ் புல்.

இன்னிக்கு காலை ஷோ 90 சதவீதம் முடிஞ்சிது. இன்னிக்கு மதியம் எல்லாமே காலி.. நாளைக்கு இதே மாதிரி இருக்கும்.. நாளைக்கும் ஞாயிற்றுக்கிழமையும் இதே மாதிரி இருக்கும்..

திங்கள் கிழமை கொஞ்சம் கம்மியா இருக்கும். ஆனா செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என்பதால் ஹவேஸ் புல்லாக இருக்கும். 

தொடர்ந்து 6 நாட்களுக்கு மிகப்பெரிய வசூலை இப்படம் பண்ண போகுது.. தமிழ்நாடு முழுவதும் இப்படம் அருமையா வசூல் செய்து வருகிறது.

850 திரையரங்குகளிலும் 550 காம்ப்ளக்ஸ் லயும் ரிலீஸ் ஆகிருக்கு.. இந்த படம் கிட்ட தட்ட 3 வாரம் அசைக்க முடியாது னு ரெட் ஜெயண்ட் போன்ற விநியோகஸ்தர் சொல்றாங்க..அவ்ளோ பிரமாதமா இந்த படம் போகும். வரும் 25 ம் தேதி சில படங்கள் வெளியிட திட்டம் வெச்சிருந்தாங்க.. அவங்களுக்குலாம் பெரிய சவாலாக இப்படம் அமைந்துள்ளது.

ரஜினி சாரும் சரி அவருக்கு பின்னாடி இருக்க முக்கியமான நடிகர்களுக்கும் சரி ரசிகர்கள் முடிவு பண்ணிட்டா மூன்று வாரங்களுக்கு அசைக்க முடியாது. இதேதான் விக்ரம், வாரிசு, துணிவு க்கு நடந்தது. வாரிசு துணிவு க்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் அதுவும் நல்ல வசூல் செய்தது. இதையெல்லாம் தாண்டி ஜெயிலர்‌ படம் வசூல் செய்யும்..

6 நாட்களிலே 100 கோடியை தொடும்.. இந்த படத்தோட கணிப்பு விக்ரம் படத்தோட வசூலை தொடும் என்று சொல்கிறார்கள். ஏன்னா அடுத்து வரும் வாரங்களில் போட்டியே இல்லை.. அதனால் பெரிய வெற்றி கிடைக்கும். இது பண்டிகை நாட்களும் இல்லை இதையெல்லாம் தாண்டி இப்படம் வசூல் செய்து வருகிறது.. “ என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

மேலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..