"உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் பட வசூலை முந்துமா ஜெயிலர்?" தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் – Exclusive Interview உள்ளே..

விக்ரம் ஜெயிலர் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் - Producer Dhananjayan on Jailer and Vikram collection report | Galatta

ரசிகர்களின் எதிர்பார்பின் மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன், ஜாக்கி ஷராப், சுனில், தமன்னா, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைதுள்ளார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் கொண்டாட்டங்களுடன் ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் நேற்று வெளியாகி இரண்டாவது நாளாக வெற்றிகரமாக் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் பிரம்மாண்டமான ஆதரவுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் நேர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது கலட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் மற்றும் கணிப்பு குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் விக்ரம் திரைப்படத்தை ஜெயிலர் திரைப்படம் முந்துமா என்ற கேள்விக்கு, அவர் பேசியதாவது.

"ஜெயிலர் Industry Hit ஆகுமா‌னு சொல்ல முடியாது. அதுக்கு முதல்ல பொன்னியின் செல்வன் 1 அ தாண்டனும். அது தமிழ்நாட்டில் மட்டும் 210 கோடிக்கு மேல் பண்ணிருக்கு..  அதுக்கு முன்னாடியே Industry Hit அ மாறுன படம் விக்ரம். 180 கோடி  வசூல் பண்ணுச்சு..  இப்போ எங்க கணிப்பு படி ஜெயிலர் படம் விக்ரம் படத்தை தொடலாம்.. இப்போ தமிழ் சினிமாவை ரூல் பண்றது ரஜினி கமல் தான்.பொன்னியின் செல்வர் மல்டி ஸ்டார் படம் அதனால் அதை தவிர..

Industry Hit னு இப்போ சொல்லனும்னா ரஜினி, கமல் படம் தான் இருக்கும்.. இன்னிக்கு Working Day 90 சதவீதம் டிக்கெட் விற்பனையாகி ஓடிட்டு இருக்கு..  அப்போ வர விடுமுறை தினங்களில் படம் ஹவுஸ் புல் தான்.. இந்தளவு வரவேற்பு கிடைக்கும் போது வசூல் சாதனை பிரம்மாண்டமா இருக்கும்..என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்..

கடந்த ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நேர்த்தியான திரைக்கதையில் உருவாகி வெளியான இப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகபெரிய வெற்றி படமகா இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் ஜெயிலர் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..