நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.. இரங்கல் தெரிவித்து வரும் ரசிகர்கள்..

நடிகர் சத்யராஜின் தயார் காலமானார் - Actor Sathyaraj mother passed away | Galatta

இந்திய திரையுலகில் ஆகசிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். 1978 ல் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தில் அறிமுகமான இவர் அதன் பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். அதன்பின்  1985 ல் வெளியான சாவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சத்ய ராஜ் அதன்பின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் கவனம் பெற்றார்.

பல தசாப்தங்களுக்கு முன் தொடங்கி இன்று வரை கதாபாத்திரத்தை கச்சிதாமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி அந்தஸ்தை பெற்று வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல மொழிகளில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் சத்யராஜ் நடிப்பில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், நயன்தாராவின் கனெக்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் எதற்கும் துணிந்தவன், லவ் டுடே போன்ற 9 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அதை தொடர்ந்து இந்த ஆண்டு இவரது நடிப்பில் வால்டர் வீரய்யா, தீர்க்கதரிசி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன.  இதையடுத்து தற்போது சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பில்  வெப்பன் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானது குறிப்பிடதக்கது. தற்போது நடிகர் சத்யராஜ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட  பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். தயார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94) இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இவர் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 4 மணியளவில் காலமானார். நாதம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் இறந்த செய்தியறிந்து உடனடியாக ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த நடிகர் சத்யராஜ் தற்போது கோவை விரைந்துள்ளார். நடிகர் சத்யராஜின் தாயார் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.