நடன இயக்குனர், இயக்குனர் & நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் பிரபுதேவா நடிப்பில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான திரைப்படம் பொன்மாணிக்கவேல். இப்படத்தில் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் பிரபுதேவா.

தொடர்ந்து வருகிற டிசம்பர் 10ஆம் தேதி பிரபுதேவாவின் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள தேள் திரைப்படம் ரிலீசாகவுள்ளது. மேலும் இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா ஆகிய திரைப்படங்களும் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அடுத்ததாக அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்.P.பிள்ளை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரெஜினா கெஸன்ட்ரா நடிக்கிறார்.  டான் சாண்டி எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

1990 களின் இனிமையான நினைவுகளைப் பற்றிப் பேசும் படமாக தயாராகும் இப்படத்திற்கு ஃபிளாஷ்பேக் (FLASH BACK-1990's SWEET MEMORIES) என பெயரிடப்பட்டுள்ளது.  ஃபிளாஷ்பேக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (நவம்பர் 25) வெளியாகிறது. பிரபுதேவா மற்றும் ரெஜினா இணைந்து நடித்துள்ள ஃபிளாஷ்பேக்  படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…