நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஏன்? -  Why fans celebrate Lokesh kanagaraj | Galatta

எல்லோருக்கும் ஒரு தருணம் வரும் அந்த தருணம் வரும் போது வாழ்வின் சூழலே மாறும். அந்த தருணம் வரும்வரை சரியான நோக்கத்தில் ஓட வேண்டும் என்று சில தன்னம்பிக்கை கட்டுரைகளில் படித்திருப்போம். சிலர் அந்த வார்த்தைகளுக்கு உதாரணமாகவும் வாழ்ந்து உள்ளனர். அதில் திரைத்துறையில் சமீபத்தில் இளைஞர்களுக்கு உதாரணமாக பயணித்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

வங்கி ஊழியராக பணியாற்றும் போதே திரைத்துறையில் சாதனை படைக்க வேண்டும். மக்களை உற்சாகப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குறும்படங்களை இயக்கி ஓடிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ல் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் வெளியான ‘மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

முதல் படத்திலே வித்யாசமான கதைக்களம், ஒரு இரவில் நான்கு வாழ்க்கைகளின் இணைப்பு, Non linear  திரைக்கதை  என்று திரில்லர்  திரைப்படமாக கொடுத்து அசத்தியிருப்பார். மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்று இல்லாமல் கதையை மட்டுமே நம்பி இறங்கினார் லோகேஷ் கனகராஜ் படம் வெளியாகி முதல் வாரத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றது. பின் படம் பார்த்து வந்தவர்களின் பாராட்டுகளினால் இரண்டாவது வாரத்தில் திரையரங்களின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு திரைப்பட்சம் கமர்ஷியலாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இளம் இயக்குனர்களின் ஒருவராக இணைந்தார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தில் ஆரவாரமின்றி பெரும்பாலும் சிறிய குழுவோடு இறங்கிய லோகேஷ் கனகராஜ்

இரண்டாவது படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் களம் இறங்கினார். ‘கைதிபடத்தின் தலைப்புடன் வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உயர்த்தியது. பின்னர் படத்தின் டீசர், டிரைலர் என்று அடுத்தடுத்த எதிர்பார்பை எகிற வைத்தார் லோகேஷ் கனகராஜ்.  

அதன்படி  கடந்த 2019 ல் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை தாண்டி மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. அட்டகாசமான சண்டை காட்சிகள், மிரட்டலான சேஸிங், ஒரு இரவில் நடக்கும் கதைக்களம், பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு டார்க் ஷேடில் படம் நகரும். விறுவிறுப்பான திரைக்கதை மக்களுக்கு பிடித்து போக கைதி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கார்த்தி திரைப்பயணத்தில் கைதி திரைப்படம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்த படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தேடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவரானார்.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

அதன்பின்அட்டகாசமான அறிவிப்புடன் தமிழ் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜயை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற செய்தி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. மேலும் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. ஒருபுறம் விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பினை கொண்டாடி தீர்த்தனர். காரணம் இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவும் குறிப்பாக வித்யாசமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுத்து கொண்டாட வைத்தவர் லோகேஷ் கனராஜ் என்பதே.. கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் பெற்று வெற்றிபெற்றது. விஜய் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாகாவும் மாஸ்டர் அமைந்தது. ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் படமாக மாஸ்டர் இருந்து வருகிறது.

மூன்றாவது படத்திலே உச்ச நட்சத்திரத்தை தொட்டு விட்டார் இதற்கு பின் யாரை இயக்கவிருக்கிறார் என்று பேச்சு சினிமா வட்டாரத்தில் பரவியது. அந்த தருணத்தில் மீண்டும் சர்ப்ரைஸ் செய்தார் லோகேஷ் கனகராஜ். உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி டிரெண்ட் ஆனது. கமல் ஹாசனின் முந்தைய படங்கள் சரியாக ஓடாமல் இருந்தது. அதன் பின் அவர் நீண்ட இடைவெளியை எடுத்தார் பின் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் லோகேஷ் கனகராஜ் வைத்து தொடங்கினார்.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

கமல் ஹாசனுடன் இணைந்து பாஹ்த் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என்று நட்சத்திரப் பட்டாளத்தை இணைத்து Lokesh Cinematic universe என்ற பிரிவை உருவாக்கி இந்திய அளவு டிரெண்ட் செய்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல தசாப்தங்களாக வெற்றியை பார்த்த கமல் ஹாசன் திரைப்பயணத்தில் பிரம்மாண்ட வெற்றியாக இப்படம் அமைந்தது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ் கனகராஜ். தனக்கென ரசிகர் கூட்டத்தை ஒரு உச்ச நடிகர்களுக்கு இணையான அளவு விரிவடைய செய்துள்ளார். தற்போது மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்துடன் லோகேஷ் கனகராஜ் தளபதி கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று  நம்பப் படுகிறது.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

லோகேஷ் கனகராஜ்  ரசிகர்களால் கொண்டாடப்பட சில காரணங்கள் :

இயக்கம்

ஆர்ட் சினிமா என்று சொல்லப்படும் படங்களில் சில விஷயங்கள் தனித்துவமாக இருக்கும் உதாரணமாக ஒளிப்பதிவு.. அது கவனிக்கப்பட்டு அன்கீகரிக்கப்படுமே தவிர கொண்டாடப்படாமல் இருக்கும். ஹாலிவுட், மலையாள சினிமாவில் Dark Shade & High Contrast ஒளிப்பதிவை கதைக்கு ஏற்றாற்போல் மாற்றி அதை மக்கள் கொண்டாட செய்து அதனை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் அந்த விஷயம் இன்னும் தத்தளித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த விஷத்தை தன் முதல் படத்திலே மாற்றி முழுக்க முழுக்க கதை இரவில் நடப்பது போலவும் இரவு காட்சிகளை நேர்த்தியாக உலக தரத்தில் கொடுத்து மக்களை கொண்டாட வைப்பதை தொடர்ந்து அவரது படங்களில் கொடுத்து கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக கடைசியாக வந்த விக்ரம் திரைப்படம் சிறந்த உதாரணம்

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

கதை – திரைக்கதை

தரமான திரைப்படத்தை நல்ல திரைக்கதையும் அதன் வடிவமைப்பை கொண்டு மட்டுமே இதுவரை படங்களை கொடுத்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் விஜய் க்கு நிகராக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை வைப்பது. இந்தியாவையே தன் நடிப்பினால் ஆளும் உலகநாயகன் என்றாலும் இரண்டாம் பாதியில் இருந்து தான் அவரை கதையில் கொண்டு வருவதும் போன்ற விஷயங்களை பெரிய ஹீரோ திரைப்படங்களில் துணிச்சலாக கையாளுவதெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

தொழில்நுட்பம்

லோகேஷ் கனகராஜ் படங்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு எந்த இடத்திலும் சமாதானமாக போனதில்லை. மெனகெட்டு அந்த காட்சியை அழகுப்படுத்தும் விஷயங்களை சேர்த்துக் கொண்டே இருப்பார். குறிப்பாக ஒலி, ஒளி வடிவமைப்பு

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

LCU

1986 ல் வெளியான விக்ரம் படத்தில் உள்ள விக்ரம் கதாபாத்திரத்தை கார்த்தி நடித்த கைதி படத்தின் தொடர்ச்சியாக இணைத்து ஒரு யூனிவர்ஸ் உருவாக்கி அதில் இதுவரை கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, பாஹ்த் பாசில், அர்ஜுன் தாஸ், நரேன் என்று ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கொண்டு வந்துள்ளார். இதில் தற்போது எடுத்து வரும் லியோ படத்தில் நடிக்கும் விஜயும் இணைவார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. மேல்நாட்டு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த யூனிவர்ஸ் என்று பிரிவுகளை இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப் படுத்தி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் லோகேஷ் கனகரா.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out now

கதாபாத்திரங்கள்

முதல் படத்திலிருந்தே கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மெனக்கெடுவது தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் இன்னும் பேசப்பட்டு கொண்டே தான் உள்ளது. குறிப்பாக கைதி டில்லி, அன்பு, அடைக்கலம், நெப்போலியன், பிஜோய் மற்றும் மாஸ்டர் படத்தில் ஜே.டி, பவானி.. விக்ரம் படத்தில், விக்ரம், சந்தானம், அமர், ரோலக்ஸ் என்று தனது படங்களில் உள்ள கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அழுத்தமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

kajal aggarwal yogi babu horror comedy film ghosty movie new song out nowகுறுகிய காலத்தில் வித்யாசமான கதைகளையும் தனித்துவமான இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய உச்சம் பெற்று தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கலாட்டா தமிழ் மீடியா சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள்.

‘ஆர் ஆர் ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு குவியும் பாராட்டுகள்..  நீளும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் இதோ..
சினிமா

‘ஆர் ஆர் ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு குவியும் பாராட்டுகள்.. நீளும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் இதோ..

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா நிறுத்தம்.. நடந்தது என்ன?.. – அதிர்ச்சியில் ரசிகர்கள் விவரம் உள்ளே..
சினிமா

ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் விழா நிறுத்தம்.. நடந்தது என்ன?.. – அதிர்ச்சியில் ரசிகர்கள் விவரம் உள்ளே..