சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? சமந்தா பகிர்ந்த First review.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

சாகுந்தலம் படம் குறித்து கருத்தை பகிர்ந்த சமந்தா வைரல் பதிவு இதோ.. Samantha Shares shaakundalam movie review | Galatta

இந்திய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் கடந்த சில ஆண்டுகளாக சமந்தா பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். அதன்படி அவர் நடிப்பில் வெளியான பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் இந்திய அளவு வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. சமந்தாவின் கதாபாத்திரம் இந்தியளவில் கவனம் பெற்று தற்போது அவருக்கு வாய்புகள் குவிந்து வருகிறது. இதனிடையே தனிப்பட்ட வாழ்கையில் சில பிரச்சனைகளை சந்தித்த சமந்தா 'மயோசிடிஸ்' என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்கான சிகிச்சையில் முழுதாக ஈடுபட்டார். இதனால் சமந்தா நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படங்கள் நடிக்கவிருந்த திரைப்படங்கள் நிலுவையில் இருந்தது.

இருப்பினும் நிதானமாக ஒவ்வொரு படங்களாக நடித்து முடித்து வெளியிட்டும் வருகிறார் அதன்படி சமந்தா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சாகுந்தாலம்’. ஸ்ரீ ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மகாகவி காளிதாசர் எழுதிய புரானகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிநுட்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிரபல திரைப்படமான ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே  வெளியாக வேண்டிய இப்படம் சில காரணங்களினால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. தற்போது இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் படத்தின் இயக்குனர் குணசேகர் மற்றும் பட தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் நீலிமா ஆகியோர் சாகுந்தலம் படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்து முடித்து விட்டு நடிகை சமந்தா அவர்கள் தனது சமூக வலைதளத்தில்,

“இன்று ஒருவழியாக சாகுந்தலம் படத்தை பார்த்து முடித்து விட்டேன்! குணசேகர் சார்.. நீங்கள் என் மனதை வென்று விட்டீர்கள். அருமையான படமாக சாகுந்தலம் வந்துள்ளது. நமது காவியங்களில் ஒன்று அன்புடன் உயிர்பித்துள்ளது. குடும்பங்கள் இந்த படத்தை கொண்டாடுவதை நான் பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன். மற்றும் குழந்தைகளே உங்களுக்கு இந்த மாயஜால உலகம் நிச்சயமாக பிடிக்கும்..  தில் ராஜு சார் மற்றும் நீலிமா மிக்க நன்றி.. இந்த அருமையான பயணத்தை நான் என்றும் மறக்க மாட்டேன்!” என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இதனையடுத்து அவரின் பதிவு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  சமந்தா இந்த படத்திற்கு பின் சிடாடேல் என்ற ஹாலிவுட் தயாரிப்பில் வெளியாகும் இந்திய வடிவ தொடரில் நடிக்கவிருக்கிறார் மற்றும் விஜய் தேவாரக்கொண்டா திரைப்படமான ‘குஷி படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..
சினிமா

நான்கு படத்திலே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.. – லோகேஷ் கனகராஜ் கொண்டாடப்படுவது ஏன்?.. சிறப்பு கட்டுரை இதோ..

அட்டகாசமான ஹாரர் காமெடியில் காஜல் அகர்வால் - ரசிகர்களை கவர்ந்து வரும் ‘கோஸ்ட்டி பட  வீடியோ சாங் இதோ..
சினிமா

அட்டகாசமான ஹாரர் காமெடியில் காஜல் அகர்வால் - ரசிகர்களை கவர்ந்து வரும் ‘கோஸ்ட்டி பட வீடியோ சாங் இதோ..

இது புதுசா இருக்கே.. 'ரௌடி பேபி' சந்தோஷ் நாராயணன் Version..  - அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

இது புதுசா இருக்கே.. 'ரௌடி பேபி' சந்தோஷ் நாராயணன் Version.. - அட்டகாசமான வீடியோ இதோ..