“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் - முழு வீடியோ இதோ..

பாலியல் துன்புறுத்தல் குறித்து கருத்தை பகிர்ந்த காயத்ரி ரகுராம்  - Gayaythri Raghuram about Kushboo abuse by her father issues | Galatta

தமிழ் சினிமாவில் நடிகரும் முன்னணி நடிகர்களுக்கு நடன வடிவமைப்பு செய்து பிரபல நடன வடிவமைப்பு கலைஞராக வலம் வருபவர் காயத்ரி ரகுராம். பிரபல நடன கலைஞர் ரகுராம் அவர்களின் மகளான இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வந்தார். அதன்பின் நடன கலைஞராக பணியாற்றி முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றினார். மேலும் திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் காலடி வைத்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் பல ஆண்டுகளாக முக்கிய பிரமுகராக இருந்து வந்தார். சமீபத்தில் சில காரணங்களினால் அவர் மக்கள் பணியாற்றி வந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறினார்.

காயத்ரி ரகுராம் இடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டிரண்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் நடிகையும் பாரதிய ஜனதா அரசியல்  பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தனது தந்தையினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து வெளிப்படையான கருத்துகளை பகிர்ந்தார். இது குறித்து காயத்ரி ரகுராம் அவர்களிடம் கேட்கையில், அவர், "அவங்க வெளிப்படையா பேசியிருக்காங்க.. அவங்க வளர்ந்த வந்த நேரத்திலே அதை சொல்லியிருக்கலாம் ன்றது என்னோட கருத்து.நாளைக்கு எந்த குழந்தையும் பயப்படாம அவங்க அம்மா கிட்ட சொல்றது தான் சரியானது.. இன்னிக்கு 99 சதவீதம் பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள்.. அப்படி இருக்கறப்போ இது போல வெளிப்படையா பேசுறது சரிதான்.

ஆனால் குஷ்பு ஏன் இவ்வளவு தாமதா சொல்லனும்.. ஒரு தேசிய கட்சியின் பெண் சார்ந்த பதவியில் வந்ததற்கு அப்பறம் ஏன் அதை சொல்லனும்.. அதுக்கு முன்னாடியே அத சொல்லி பேசியிருக்கலாமே.. ஒரு வயது வந்து ஒரு பக்குவம் வந்தாச்சு..‌அவங்கு குழந்தைகளும் நல்லா வளர்ந்து பக்குவப்பட்டாச்சு..

அவங்க  அரசியலுக்கு வந்த போதே இதுகுறித்து சொல்லியிருக்கலாம். ஏன் இப்போ இருக்க பெண் சார்ந்த பதவியில் வந்ததுக்கு அப்பறம் சொல்றது அப்போ அந்த பதவி இருந்தால் தான் எல்லா பெண்களும் வெளிப்படையா பேசனுமா? என்ற கேள்வி வருது.. அப்போ பதவி அதிகாரம் இல்லாத பெண்கள் என்ன பண்ண முடியும்." என்றார் காயத்ரி ரகுராம்.

மேலும்உங்களுக்கு இது போன்று ஏதாவது கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதா? என்ற கேள்விக்கு அவர்,  "எல்லா பெண்களும் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்.  என்னையும் சேர்த்து தான். என்ன தருணம் என்பதை எனக்கு சொல்லனும்னு இல்ல.. குடும்பத்தில் எனக்கு அந்த மாதிரி நடந்தது கிடையாது. வெளிய அந்த மாதிரி நடந்திருக்கும்.." என்றார்.

மேலும் நடிகையும் நடன கலைஞருமான காயத்ரி ரகுராம் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல் அடங்கிய வீடியோ இதோ..

இது புதுசா இருக்கே.. 'ரௌடி பேபி' சந்தோஷ் நாராயணன் Version..  - அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

இது புதுசா இருக்கே.. 'ரௌடி பேபி' சந்தோஷ் நாராயணன் Version.. - அட்டகாசமான வீடியோ இதோ..

‘ஆர் ஆர் ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு குவியும் பாராட்டுகள்..  நீளும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் இதோ..
சினிமா

‘ஆர் ஆர் ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு குவியும் பாராட்டுகள்.. நீளும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் இதோ..

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

புது கெட்டப்பில் அசத்தும் லெஜென்ட் சரவணன் .. ஒரு வேளை புது படமா இருக்குமோ? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..