பிரபல நடன கலைஞர் ரகுராம் அவர்களின் மகளான காயத்ரி ரகுராம் தமிழில் பிரபு மற்றும் பிரபு தேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே மக்கள் கவனத்தை ஈர்த்த காயத்ரி பின் தொடர்ந்து விசில் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இடையே தமிழ் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் பின் தனது தந்தையை போலவே நடனக்கலைஞராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன்படி ‘ஜெயம் கொண்டான்’ படம் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘தலைவி’ படம் வரை பல படங்களுக்கு நடன கலைஞர்களாக பணியாற்றியுள்ளார். மேலும் காயத்ரி ரகுராம் விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி முன்னணி நடன கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மேலும் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் காலடி வைத்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சியில் முக்கிய பிரமுகராக பல ஆண்டுகள் பணியாற்றினார். சமீபத்தில் சில காரணங்களினால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் காயத்ரி ரகுராம். இந்நிலையில் காயத்ரி ரகுராம் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் இயக்கி தயாரித்து நடித்த யாதுமாகி படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர்,
"யாதுமாகி படம் டான்சர்களுக்கு நடக்குற விஷயம் அதுவும் பெண்களுக்கு.. அவங்களுக்காகவே எடுக்கனும் னு நினைச்சேன். சும்மா சொல்றாங்க.. கூத்தாடி.. கூத்தாடதான் வந்திருக்கீங்க.. னு நிறைய பேர் பேசுவாங்க.. ஒவ்வொரு டான்சர் பெண்களுக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும். அவங்க குடும்பத்தை காப்பாத்த அவங்க குட்டிய ஆடை போடவும், வெயில் மழை பார்க்காமல் கஷ்டபடவும் தெரியும். சினிமாகாரர்களுக்கு வாடகை வீடு கிடைப்பது கூட ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் நிறைய பேரிடம் இதெல்லாம் கேட்டுருக்கேன்.. அதை படமா எடுத்து மக்களுக்கு காட்டனும் னு நினைச்சேன். எதுக்கு கூத்தாடி, சினிமாகாரன் னு சொல்லனும்? அவங்களுக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்.. அவ உழைத்து சாப்டுற.. அவ பிச்சை எடுக்கல.. என்ன பொறுத்தவரை எல்லா டான்சர்ஸும் அவங்க குடும்பத்தை காப்பாத்த ஓடிக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.
மேலும் அவரது அடுத்த படம் இவரை வைத்து இயக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்? என்ற கேள்விக்கு, “எனக்கு விஜய் வெச்சு படம் பண்ணனும்..ஆனா படத்துல ஹீரோயின் இல்லாமல் இருக்கும்” என்றார்.
மேலும் நடிகையும் நடன கலைஞருமான காயத்ரி ரகுராம் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல் அடங்கிய வீடியோ இதோ..