தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி இந்த ஆண்டில் (2022) ரசிகர்களுக்கு ஹாட்ரிக் ஹீட் கொடுத்து விருந்து வைத்தார். முன்னதாக கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்த்த கார்த்தி நடித்து வெளிவந்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி அனைவரது இதயங்களையும் கொள்ளையடித்தார். தொடர்ந்து தீபாவளி வெளியீடாக கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த வரிசையில் அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் ஜப்பான் திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இதனிடையே உலகப் புகழ்பெற்ற பிரபலமான மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE நிகழ்ச்சியின் விளம்பர படத்தில் தற்போது கார்த்தி நடித்துள்ளார்.

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பாகும் WWE நிகழ்ச்சியின் புதிய விளம்பரத்தில் WWE சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து கார்த்தி நடித்துள்ள அதிரடியான விளம்பர படம் தற்போது வெளியாகியுள்ளது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் RAW, புதன்கிழமைகளில் NXT மற்றும் சனிக்கிழமைகளில் SMACKDOWN நிகழ்ச்சிகள் காலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் மறுஒளிபரப்பு மாலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலகி வரும் கார்த்தி நடித்துள்ள அதிரடியான இந்த விளம்பர படம் இதோ…