கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசத்தி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.இவர் நடித்துள்ள விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த படத்தினை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

பிரகாஷ்ராஜ்,ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன்,மனோஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான மதுரவீரன் பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.அதிதி ஷங்கர் , யுவன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் செம ஹிட் அடித்திருந்தது,கார்த்தி,அதிதியின் நடனமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்