தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பிரசாரம் மேற்கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்கி, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

vote

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. 

இந்நிலையில் கொரோனோ பரவல் காரணமாக, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்து. அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி அளித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள் தோதல் பிரசார அனுமதி தொடா்பாக உதவி தோதல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூட்டம் நடத்தும் நபா்கள் சம்பந்தப்பட்ட உதவி தோதல் நடத்தும் அலுவலரிடம் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் கூட்டம் நடத்த விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்த நபருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். உதவி தோதல் நடத்தும் அலுவலருக்கு காவல் துறையிடமிருந்து தடையின்மை சான்று பெற ஏதுவாக காவல் உதவி ஆய்வாளா் பணியமா்த்தப்பட்டுள்ளாா். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசார கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காலை 6 மணி முதல் இரவு 10 வரை அனுமதி வழங்கப்பட்டுளள்து.