சீயான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள படம் மகான்.இந்த படம் நேரடியாக OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

சிம்ரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாபி சிம்ஹா,சனந்த்,முத்துக்குமார் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தினை திரையரங்குகளில் காண முடியவில்லை என சில ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீடியா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது.அப்போது படத்தின் தொடக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லோகோ வருகையில் மாஸ்டர் படத்தின் மாஸ்டர் தி பிளாஸ்டர் பாடல் வந்தது.

இதுகுறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.தளபதி ரசிகர்களுக்கு இந்த படத்தினை பார்க்க எக்ஸ்ட்ரா ஒரு காரணம் கிடைக்க செம ஜாலியாக இருந்தனர்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தான் மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளர் என்பதும்,அனிருத் இந்த படத்தில் முதலில் கமிட் ஆகி பின்னர் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போதைக்கு சில காரணங்களால் தமிழ் வெர்ஷனில் டைட்டில் கார்டில் வேறு மியூசிக் வருகிறது விரைவில் இது மாஸ்டர் தீமுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.