திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், தனது வீட்டில் இருந்து வருகிறார்.

அத்துடன், பள்ளிகள் திறப்பது தள்ளிப் போய் கொண்டே இருப்பதால், அந்த மாணவி வீட்டின் அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று, பயிற்சி பெற்று வந்தார்.

அப்போது, அங்கு முகமது மைதீன் என்ற இளைஞன், அந்த மாணவிக்கு அறிமுகம் ஆகி உள்ளார். அந்த இளைஞர், மாணவியிடம் தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனால், அந்த 10 ஆம் வகுப்பு மாணவியும், காதல் வலையில் மாட்டிக்கொண்டார். இதனால், ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும், தங்களது வீட்டுக்குத் தெரியாமல் காதலித்து வந்த உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி, முகமது மைதீன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு, மாணவியிடம் பல ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மாணவி, வீடு திரும்பியதும் இந்த விசயம் எப்படியோ மாணவியின் தாயாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தயார், இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் முகமது மைதீன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 10 ஆம் வகுப்பு மாணவியை முகமது மைதீன் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, முகமது மைதீனை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கைது செய்தனர். 

மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவியை, காவல் துறையினர் அங்குள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு, அந்த மாணவிக்கு கொரோனா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், கோவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்தவுடன் விட்டுச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். 

கோவை மாவட்டம் சூலூர் பகுதி செஞ்சேரிப்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான பிருந்தா என்ற இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், “திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கி உள்ளார். ஆனால், குழந்தை பிறந்தவுடன் அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு, அங்கிருந்து அவர் தலைமறைவாகி உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், “என்னை காதலித்து குழந்தையைக் கொடுத்து விட்டுத் தலைமறைவான செல்வத்தின் மீது நடவடிக்கை வேண்டும்” என்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், “கடந்த 5 வருடங்களுக்கு முன்பு செல்வம் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி தன்னை கர்ப்பமாக்கினார் என்றும், இது குறித்து பெற்றோருக்குத் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார் என்றும், ஆனால் கர்ப்பமாகியது தனது பெற்றோருக்கு தெரிந்து அதன் பிறகு அவர்கள் செல்வத்தின் வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்து பேசும் போது அதற்கு செல்வம் மறுப்பு தெரிவித்து விட்டார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து ஏற்கனவே பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து செல்வம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்றும், ஆனால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தற்போது செல்வம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றும், கூறியுள்ளார்.

“இதனால், எனக்கும் எனது 4 வயது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்றும், அவர் அந்த புகார் மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.