தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தினேஷ். பல படங்களில் சிறிய பாத்திரத்தில் நடித்த இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நல்ல பாத்திரம் கிடைத்தது. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் தினேஷ். தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை போன்ற வெற்றி படங்களில் நடித்தார். கடைசியாக அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்து அசத்தினார். 

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் நானும் சிங்கிள் தான். இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே நானும் சிங்கிள் தான் என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் Desi Lady பாடல் வீடியோ வெளியானது. ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்த இந்த பாடலை லேடி காஷ் எழுதி பாடியுள்ளார். பாடலில் ராஜேந்திரன் மற்றும் தினேஷின் நகைச்சுவை 

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படமும் தினேஷ் கைவசம் உள்ளது. ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் அருள்தாஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். நான் மகான் அல்ல, தென்மேற்கு பருவகாற்று, சூதுகவ்வும், தர்மதுரை, காலா போன்ற படங்களில் நடிப்பில் அசத்திய அருள்தாஸ் தயாரிப்பாளராக கால் பதிக்கும் படம் இதுதான்.