தென்னிந்தியத் திரைப்பட உலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. ஒளிப்பதிவாளராக தனது திரை பயணத்தை தொடர்ந்தவர், இன்று மக்கள் கொண்டாடும் வெற்றி படைப்புகளை தந்து வருகிறார். கார்த்தி வைத்து இவர் இயக்கிய சிறுத்தை திரைப்படம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. 

அதன் பின் தல அஜித் குமார் வைத்து இவர் இயக்கிய வீரம் திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றிய வேதாளம் திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டியது. 

அதன்பின் சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணி பரவலாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் இவரை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது. 

இந்நிலையில் சிவாவின் தந்தை, ஜெயக்குமார் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவரின் தந்தை ஜெயக்குமார் டாக்குமெண்டரி போட்டோக்ராஃபர் ஆவார். இவரது தாத்தா வேலன் பிரபல தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அசிஸ்டன்ட் கேமராமேனாக சேர்ந்தார். இவரது குடும்பமே திரைத்துறையில் சம்பந்தப்பட்ட குடும்பம் என்பது குறிப்பிடதக்கது. இயக்குனர் சிவாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது நம் கலாட்டா. 

சிவா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், மீனா ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இதன் மீதம் உள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.