விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பொம்முக்குட்டி அம்மாவுக்கு.ரேத்வா என்ற குழந்தை நட்சத்திரம் பொம்முவாக நடித்து வருகிறார்.கிரண்,ராஷ்மிதா ரோஜா,ஸ்ரீதேவி அசோக்,ஸ்ருதி ஷண்முகப்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கி , புதிய எபிசோடுகள் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

தற்போது இந்த தொடரின் நாயகி ராஷ்மிதா ராஜாவிற்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.இவருக்கு ரசிகர்களிடமிருந்தும்,பிரபலகளிடமிருந்தும் வாழ்த்துக்கள்  வண்ணம் உள்ளன.கலாட்டா சார்பாக ராஷ்மிதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.