முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கம்பம் அருகே சினிமா படப்பிடிப்பு நடைபெற்ால், அதனை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினாா்.

corono

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக மக்களையே கடந்த 2 வருடங்களாக கட்டுக்குள் வைத்து வருகிறது. பாகுபாடுன்றி உலகையே புரட்டி போட்ட இந்த கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் அதிவிரைவில் கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது.

அந்த வகையில் இப்போது புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டப் பகுதிகளில் நடிகா்கள் காா்த்தி, சூரி இணைந்து நடிக்கும் 'விருமன்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கம்பம் சுருளிப்பட்டி சாலையில் முல்லைப்பெரியாறு அருகே நெல் கதிா் அடிக்கும் களத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மேலும் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சோக்கை சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதற்காகமாவட்ட ஆட்சியர் சுருளிப்பட்டியிலிருந்து கம்பம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது முல்லைப்பெரியாறு அருகே படப்பிடிப்பு நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியா், அங்கு சென்று பாா்த்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கூடியிருந்தனா். 

இதைத்தொடா்ந்து உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பை காண அப்பகுதி மக்களும் பெருமளவில் திரண்டிருந்ததால், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா் ஆா்.லாவண்யா உள்ளிட்ட போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி அனைவரையும் கலைந்து போக உத்தரவிட்டார் ஆட்சியர் க.வீ. முரளிதரன்.